கருணாநிதியின் மறைவிடத்திற்கு சென்ற முக அழகிரி, எனது தந்தையிடம் ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன் என பேசியுள்ளார்.
திமுக தலைவராக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார்.
இதையடுத்து புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்த தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இந்த செயற்குழு கூட்டத்தில் திமுகவின் புதிய தலைவர் யார் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு. க அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்கப்படும் என பேசப்பட்டு வந்த நிலையில் இன்று கருணாநிதியின் நினைவிடத்திற்கு குடும்பத்தினருடன் வந்த மு.க.அழகிரி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அழகிரி, என் தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன் என்றார். மேலும் கருணாநிதியின் உண்மையான விஸ்வாசிகள் அனைவரும் என்னிடமே உள்ளனர் என கூறினார். தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் திமுகவிலே இல்லை ஆகவே அதை பற்றி கூற முடியாது என பேசிவிட்டு சென்றார்.