Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

காணாமல் போன கமல் கட்சி! தினகரனுக்கும் கோவிந்தா!

Advertiesment
LokSabha Election Results 2019 Live
, வியாழன், 23 மே 2019 (10:33 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தேர்தலில் 5% முதல் 10% வரை ஓட்டுக்களை பெறும் என்றும், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக அக்கட்சி விளங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. கமல் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் கூடிய கூட்டத்தை பார்த்து திராவிட கட்சியினர்களே மிரண்டு போயினர்.
 
ஆனால் கூட்டம் கூடுவதற்கும் ஓட்டுக்களை பெறுவதற்கும் சம்பந்தம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் கமல் கட்சியின் வேட்பாளர்கள் ஒருசில நூறு வாக்குகளே பெற்றுள்ளனர். அனேகமாக 38 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் கமல் கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பது உறுதி என்றே தற்போதைய நிலையில் இருந்து தெரிய வருகிறது.
 
webdunia
அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என நான்கு கட்சிகளையும் ஆர்.கே.நகர் தொகுதியில் வீழ்த்திய தினகரன், இந்த தேர்தலில் தனது அமமுக வேட்பாளர்களை கரையேற்ற முடியவில்லை. ஐந்து தொகுதிகளிலாவது அமமுக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இக்கட்சிக்கும் கிட்டத்தட்ட கமல் கட்சியின் நிலைதான் ஏற்பட்டுள்ளது 
 
மொத்தத்தில் திமுக, அதிமுகவை தவிர தமிழக மக்கள் வேறு கட்சியை இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதே இந்த தேர்தலின் முடிவு காட்டுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலை