Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் அனைவருக்கும் நிவாரண தொகை.. 16ஆம் தேதி முதல் டோக்கன்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னையில் அனைவருக்கும் நிவாரண தொகை.. 16ஆம் தேதி முதல் டோக்கன்: அமைச்சர் தங்கம் தென்னரசு
, செவ்வாய், 12 டிசம்பர் 2023 (07:45 IST)
சென்னையில் உள்ள அனைவருக்கும்  நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் வரும் 16ஆம் தேதி முதல் நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
 
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில்  புயலினால் ஏற்பட்ட கன மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 6000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார் 
 
இந்த நிலையில்  சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூபாய் 6000 நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 
 
அரிசி அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதளம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு