Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஞ்சோலை தொழிலாளர்களின் அனைத்து வழக்குகள்.! ஆக.29ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

Manjolai

Senthil Velan

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (16:43 IST)
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் 29ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
 
மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம், சந்திரா ஆகியோர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். கடந்த விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், மாஞ்சோலை பகுதி மக்களை பார்ப்பதற்காகச் செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதோடு வலுக்கட்டாயமாக ஓய்வு பெறும் ஆவணங்களில் கையெழுத்து பெறுவதாகவும் கூறப்பட்டது. அதற்கு பிபிடிசி நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "534 பேர் முன்கூட்டியே ஓய்வை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அது சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார். ஏற்கனவே 25 சதவீதம் தொகை வழங்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள தொகை நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறையின் உதவி இயக்குநர் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது எனக் வழக்கறிஞர் கூறினர். 

 
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் விசாரணைக்காக கால அவகாசம் கோரியதால், மாஞ்சோலை சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலித்துகள் முதலமைச்சராக முடியாது.! திருமாவளவனின் கருத்துக்கு சீமான் - கார்த்தி சிதம்பரம் ஆதரவு..!!