தனது தந்தையான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை டிவியில் பார்த்துக் கொள்கிறேன என மு.க.அழகிரி கூறியிருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இவ்வளவு பேருக்கு அழைப்பு விடுத்த திமுகவினர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஸ்டாலினுக்கும் - அழகிரிக்கும் இடையே உள்ள பனிப்போரே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
ஆனாலும் இதையெல்லாம் பெரிதுபடுத்தாத அழகிரி, என்னை அழைக்கவில்லை என்றால் என்ன, சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.