Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசியல்வாதிகள் செய்யாததை அஜித்-விஜய் ரசிகர்கள் செய்த அதிசயம்

அரசியல்வாதிகள் செய்யாததை அஜித்-விஜய் ரசிகர்கள் செய்த அதிசயம்
, செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (15:00 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டமாக இருந்தாலும் சரி, ஸ்டெர்லைட் போராட்டமாக இருந்தாலும் சரி முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக போராட்டம் செய்கின்றன. 
 
வைகோ ஒருபக்கம் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடைப்பயணமும், ஸ்டாலின் இன்னொரு பக்கம் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக நடைப்பயணமும் செய்கின்றனர். அதிமுக உண்ணாவிரதம், திமுக கடையடைப்பு என மாறி மாறி ஒற்றுமையில்லாமல் போராடுவதால் போராட்டத்தின் வீரியம் குறைவாக உள்ளது.
 
இந்த நிலையில் காவிரிக்காக சிதம்பரத்தில் இன்று அஜித், விஜய் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் போஸ்டர், பேனர்களை கையில் வைத்து கொண்டு ஒற்றுமையாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தனுஷ், உள்பட இன்னும் ஒருசில நடிகர்களின் ரசிகர்களும் கலந்து கொண்டனர். 
 
டுவிட்டரில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டாலும் தமிழக மக்கள் நலன் என்று வரும்போது அஜித், விஜய் ரசிகர்கள் கைகோர்த்து கொண்டு போராட்ட களத்தில் இறங்கியது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் புகார்: போலீஸ் காவலில் போட்டு தள்ளிய பாஜக எம்எல்ஏ அடியாட்கள்!