Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் காற்றின் தரக்குறியீடு 100 ஐ தாண்டியது!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (11:06 IST)
சென்னையில் இன்று தீபாவளியையொட்டி காற்றில் மாசு அதிகரித்துள்ளது. 

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. எனவே நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையை மக்கள் புத்தாடை  உடுத்தி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இன்று  அதிகாலையிலே மக்கள்  கோயில்களுக்குச் சென்று குடும்பத்துடன் சாமி தரிசனமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று தீபாவளியையொட்டி காற்றில் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளியையயொட்டி மக்கள் அனைவரும் வீடுகளில் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதால், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில்,பெருங்குடி- 178, அரும்பாக்கம் -159,ராயபுரம் -115, வேளச்சேரி-117, என அனைத்து இடங்களில் காற்றின் தரக்குறிபீடடு 100 ஐ தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தீபாவளியையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments