Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் குண்டு வெடிக்கவுள்ளதாக மர்மநபர் மிரட்டல்: கமிஷனர் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (10:54 IST)
பொதுமக்கள் இன்று சந்தோசமாக தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் கோவையில் குண்டுவெடிக்கும்  என மெயில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்து கோவை நகர காவல்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். கோவையில் குண்டு வெடிக்க உள்ளதாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் மெயில் அனுப்பிய நிலையில் இந்த மெயில் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல் துறை  அதிகாரிகள் கோவை முழுவதும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே குண்டு வெடிப்பு என்ற பதட்டம் இன்றி தீபாவளியை பொதுமக்கள் மகிழ்ச்சி உடன் கொண்டாடலாம் என கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  
 
ஒரு பக்கம் கோவை குண்டு வெடிப்பு என மிரட்டல் இமெயில் வந்தாலும் காவல்துறை ஆணையரின் இந்த பேட்டியை அடுத்து பொதுமக்கள் அங்கு மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடி வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அதிமுகவை கைப்பற்ற ஆபரேசன் தாமரை? செங்கோட்டையன் சொல்வது என்ன?

இன்று முதல் 45 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. ரூ.75ல் இருந்து ரூ.110 கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments