அண்ணாமலை என்றைக்கு ஜெயலிதாவை பற்றி தவறாகப் பேசினாரோ அதையெல்லாம் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்து வரும் நிலையில், சமீப காலமாக அவர் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறினார். அண்மையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பற்றி விமர்சித்தார், பதிலுக்கு அவரும் அண்ணாமலையை விமர்சிthதார். இதனால் கூட்டணியில் இரு கட்சிகளிடையே விரிசல் விழுமோ என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை ரமேஸ்வரம் மாவட்டத்தில் தன் பாஜக தொண்டர்களுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலை தலைமையிலான பாஜக மற்றும் அதிமுக கூட்டணி பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணாமலையைப் பொருத்தவரை அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது மாதிரியே அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணியால்தான் பாஜகவுக்கு தமிழ் நாட்டில் பலம். அந்தப் பலத்தைப் புரிந்து கொண்டு இவர் நம்ம பிரெண்டு என்பதற்காக அவர் மீது காரி காரித் துப்பிக் கொண்டிருந்தால் எப்படி பிரெண்ட்ஷிப் இருக்கும்? நாளை அண்ணாமலை இருக்கிற வரை அதிமுகவின் ஒரு ஓட்டுக் கூட பாஜக பக்கம் விழாது.
பாஜகவில் இருப்பவர் அவர்கள் மோடிக்காமவும், அமித்ஷாவுக்காகவும் அவர்கள் அந்த கூட்டணி தர்மத்தை மதித்தாலும் அண்ணாமலை என்றைக்கு ஜெயலிதாவை பற்றி தவறாகப் பேசினாரோ அதையெல்லாம் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.