Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சுதாகர் நீக்கம்.. அதிமுக அதிரடி நடவடிக்கை..!

Siva
புதன், 8 ஜனவரி 2025 (09:49 IST)
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா நகர்  சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த 103வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்பவருக்கு ஆதரவாக, அதிமுகவின் 103வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவர் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அவரை கைது செய்தது.

இந்த கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுமி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப. சுதாகர்,   இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.


கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கேஜை விட்டுவிட்டு பயணிகளை மட்டும் ஏற்றி வந்த விமானம்! - சென்னை வந்த பயணிகள் ஷாக்!

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: அமலாக்கத்துறை சம்மன்

டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்ட 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு: மதுரையில் பரபரப்பு..!

எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.. பெரும் பரபரப்பு..!

முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உதவித்தொகை.. தமிழக அரசு முடிவு..!

அடுத்த கட்டுரையில்