Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக சார்பில் கோமதிக்கு ரு. 15 லட்சம் பரிசுத்தொகை

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (13:52 IST)
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று ஒரே நாளில் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும், தான் பிறந்த கிராமத்திற்கும் பெருமை தேடி தந்தவர் கோல்டன் கேர்ள் கோமதி. இவருக்கு ஏராளமான நிதியுதவியும், பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அதிமுக சார்பில் கோமதிக்கு ரூ. 15 லட்சம் பரிசுத்தொகை அளித்துள்ளனர்.
ஏற்கனவே திமுக ரூ.10 லட்சமும், காங்கிரஸ் கட்சி ரூ.5 லட்சமும், ரோபோ சங்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கோமதிக்கு நிதியுதவி செய்து அவர் இன்னும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் கோமதிக்கு நிதியுதவி செய்துள்ளார்.
 
விஜய்சேதுபதி தற்போது 'லாபம்' படப்பிடிப்பில் இருப்பதால் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை தனது ரசிகர் மன்ற நிர்வாகியிடம் கொடுத்தனுப்பி, தொலைபேசி மூலம் கோமதிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை விஜய்சேதுபதியின் ரசிகர்கள் சமூக இணையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்  தற்போது தங்கமங்கை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனது  கிரீன்வேஸ் இல்லத்தில்  வழங்கினார். அப்போது துணைமுதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ. பன்னீர்செல்வம் உடனிருந்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments