Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியில் அதிமுக – பாஜக பிரமுகர்கள் கைகலப்பு! போலீஸ் வழக்குப்பதிவு! – தேர்தல் நேரத்தில் பரபரப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 26 மார்ச் 2024 (10:34 IST)
நீலகிரியில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றபோது அதிமுக – பாஜகவினர் கைகலப்பில் ஈடுபட்டது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மார்ச் 20ம் தேதி முதலாக வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. சமீபத்தில் அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்று முதலாக பரபரப்பாக நடந்து வருகிறது.

சில இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இரு வேறு கட்சியினர் ஒரே நேரத்தில் வந்துவிடுவதால் வாக்குவாதங்களும், மோதலும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறாக நீலகிரியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பாஜக – அதிமுகவினர் இடையே கைகலப்பு எழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்த நிலையில் போலீஸார் அவர்களை அமைதிப்படுத்தினர்.

ALSO READ: களைகட்டும் தேர்தல் திருவிழா.. நேற்று ஒரே நாளில் 350 வேட்பு மனுக்கள் தாக்கல்!

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாஜக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பரப்புரை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால் காவல்துறை வாகனத்தை தாக்கியதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments