Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: ஈபிஎஸ் உறுதி

Mahendran
புதன், 16 ஏப்ரல் 2025 (11:20 IST)
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே அமைத்துள்ளோம் என்றும், கூட்டணி ஆட்சி கிடையாது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்பட கூறியுள்ளார்.
 
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அமித்ஷா கடந்த வாரம் சென்னை வந்த போது அறிவித்த நிலையில், வெற்றி பெற்ற பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில், சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது, "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்" என்று யாரும் தெரிவிக்கவில்லை என்றும், டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி என்று தான் அமித்ஷா கூறி இருந்தார் என்றும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
பாஜகவுடன் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் என்றும், ஆனால் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். "திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்" என்ற கருத்துக்களை உடைய அனைத்து கட்சியுடனும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம் என்றும், அந்த முயற்சியின் ஒரு கட்டம்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

அடுத்த கட்டுரையில்
Show comments