Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4-ஆம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்: 25 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும்!

4-ஆம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்: 25 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும்!

Advertiesment
4-ஆம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்: 25 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும்!
, செவ்வாய், 2 மே 2017 (10:25 IST)
தமிழகத்தில் தற்போது வெயில் அக்னி நட்சத்திரத்தையே மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது. பல மாவட்டங்களில் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகிறது. இந்நிலையில் வரும் 4-ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.


 
 
பருவமழை பொய்த்து போனது, கடுமையான வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நீர் நிலைகளும் வரண்டு போய் உள்ளது. இதனால் குடிநீர் பஞ்சமும் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி முடிகிறது. இதனால் இந்த 25 நாட்களும் வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
 
இந்த 25 நாட்களும் அனல் காற்று அதிகமாக வீசும். மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து அனல்காற்று வீசத்தொடங்கும். இன்னும் 2 நாட்களில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
 
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். ஆனால் கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடியை விட்டுப்பிடிக்கும் மோடி: ஜூலைக்கு அப்புறம் சுய ரூபத்தை காட்டுவாராம்!