Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேல்முறையீடு செய்வோம்; ஓ.பி.எஸ். முதல்வராக முடியாது: தம்பிதுரை ஆவேசம்

மேல்முறையீடு செய்வோம்; ஓ.பி.எஸ். முதல்வராக முடியாது: தம்பிதுரை ஆவேசம்
, செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (14:49 IST)
சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.


 

 
1991-96-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் சசிகலா குற்றவாளி என நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதால் சசிகலா முதல்வராக பதவியேற்க முடியாது என்பது உறுதியாகி உள்ளது.
 
மேலும் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் பேட்டியளித்த அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-
 
சசிகலா வழக்கில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவரால் முதல்வராக முடியாது, என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவின் உயரமான அணை: உடையும் அபாயம்; மக்கள் வெளியேற்றம்!!