13 பேர் உடல்கள் எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ் விபத்து! – அடுத்தடுத்த விபத்தால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (14:20 IST)
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்கள் உடல் சூலூர் விமான நிலையம் கொண்டு செல்லப்படும் நிலையில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உடலுக்கு உரிய மரியாதை செய்யப்பட்டு தற்போது அவை ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக சூலூர் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் வாகனங்களும் சென்றன. அப்போது பர்லியாறு அருகே சென்றுக் கொண்டிருந்தபோது பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காவலர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

தற்போது மேட்டுப்பாளையம் அருகே வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்த நிலையில் 13 பேரை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியதால் சேதமடைந்தது. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. வாகனம் சேதமடைந்ததால் வேறு வாகனத்தில் உடல் மாற்றப்பட்டு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்துகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக தலைவர் கலந்து கொண்ட திருமண விழா.. திடீரென மேடை சரிந்ததால் மணமக்கள் அதிர்ச்சி..!

சிறுமியை வைத்து சர்ச்சைக்குரிய வசனங்களை பேச வைத்த யூடியூபர் கைது.. என் மகள் தான் என விளக்கம்..!

கிரீன் கார்டுக்கான நேர்காணலுக்கு சென்றவர்களை கைது செய்த அமெரிக்க போலீஸ்.. இந்தியர்கள் அதிர்ச்சி..!

மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும் டிட்வா புயல்! சென்னையை நெருங்குகிறதா?

விஜய் இப்படி இயங்க வேண்டும் என்பது எனது ஆசை: திருமாவளவன் கூறிய ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments