Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுக்கு பின் என்ன? விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய தகவல்..!

Advertiesment
tnpsc

Siva

, வெள்ளி, 12 ஜனவரி 2024 (14:07 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அடுத்த கட்டமாக விண்ணப்பதாரர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது 
 
 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. ஒரு பணிக்கு மூன்று நபர்கள் என்ற வகையில் நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது மொத்தம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பிரிவில்  161 காலியிடங்கள் இருப்பதால் 483 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்,
 
அதேபோல் குரூப் 2ஏ  பதவிகளுக்கும் நேற்று  முடிவுகள் வெளியான நிலையில் அடுத்த கட்டமாக கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும்  சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.  
 
சான்றிதழ்கள் ஆன்லைன் மூலமாக சரி செய்யப்பட்டு அதன் பின் நேரில் ஒரு முறை சரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏதேனும் சான்றிதழ் விடுபட்டிருந்தால் அதை சமர்ப்பிக்க 15 நாள் கால அவகாசம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடல் – சேது பாலத்தில் செல்ல பயன்பாட்டு கட்டணம் இவ்வளவா? – அதிர்ச்சி அளிக்கும் கட்டண பட்டியல்!