சர்கார் பிரச்சனை: கமல்ஹாசனை அடுத்து குரல் கொடுத்த ரஜினிகாந்த்

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (06:01 IST)
திரையுலகில் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் முதல் ஆளாக கமல்ஹாசன் குரல் கொடுப்பதும் அவரை அடுத்து ரஜினிகாந்த் குரல் கொடுப்பதும் வழக்கமாக ஒன்றாக இருந்து வரும் நிலையில் 'சர்கார்' படப்பிரச்சனைக்கு நேற்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் குரல் கொடுத்த நிலையில் ரஜினியும் தனது டுவிட்டரில் சர்கார் படக்குழுவினர்களுக்கு ஆதரவாக டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், 'தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

'சர்கார்' பிரச்சனை குறித்து திரையுலகின் அனைத்து சங்கங்களும் கருத்து தெரிவிக்காமல் மெளனமாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் படக்குழுவினர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments