ஈபிஎஸ்-ஐ அடுத்து ஓபிஎஸ்-ஐயும் சந்திக்கும் அண்ணாமலை.. யாருக்கு ஆதரவு?
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில் அடுத்ததாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் இரு அணிகள் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரு தரப்பையும் ஒருங்கிணைக்கும் வகையில் அண்ணாமலை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை கணக்கில் கொண்டு ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற செய்ய அண்ணாமலை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் தென்னரசு வரும் ஏழாம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் அவரது தாக்கல் செய்வதாக இருந்த நிலையில் அண்ணாமலையின் சந்திப்பு காரணமாக வேட்புமனு தாக்கல் செய்வதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.