Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஆங்கிலத்தில் சட்டம் இயற்றிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் வைக்கிறார்கள்’’ -பா.சிதம்பரம்

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (12:46 IST)
''ஆங்கிலத்தில் சட்டம் இயற்றிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் வைக்கிறார்கள்’’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

IPC என்று கூறப்படும் இந்திய தண்டனை தண்டனைச் சட்டம், IEA என்ற இந்திய சாட்சிகள் சட்டம் மற்றும் குற்றம் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படுவதாக  சமீபத்தில் நாடாளுமன்ற  மக்களவையில் பாஜகஅறிவித்தது.

புதிய சட்டங்கள் கொண்டு வருவதற்கான  மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அப்போது, தாக்கல் செய்தார். அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்‌ஷ்யா, பாரதிய சுரக்ஷா சன்ஹிதா, என புதிய  சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘’இந்தியில் பெயர் வைக்க வேண்டாம் என்று கூறவில்லை. சட்டம் ஆங்கிலத்தில் இருக்கையில், பெயரும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். இந்தியில் மொழி பெயர்ப்பு இருந்தால் இதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல்? என்ன பிரிவு என நீதிபதிகள் கேட்கும்  நிலையிருக்கிறது. ஆங்கிலத்தில் சட்டம் இயற்றிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் வைக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments