Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வர் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் படுகாயங்களுடன் மீட்பு!

முதல்வர் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் படுகாயங்களுடன் மீட்பு!
, திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:41 IST)
புதுவையில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை எதிர்த்துப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி பொது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் நேற்றுடன் அம்மாநிலத்தில் பிரச்சாரம் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளரான ரங்கசாமி ஏனாம் என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் துர்கா பிரசாத் என்பவர் போட்டியிட்ட நிலையில் திடீரென அவர் நேற்று மாயமானார்.
 
அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு இருந்த நிலையில் ஏனாம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் துர்கா பிரசாத் கோதாவரி ஆற்று பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுவகிறது. புதுவை மாநில முதல்வர் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர் படு காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரான்சில் மீண்டும் தூசு தட்டப்படும் ரஃபேல் ஊழல்!