Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!

வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!

Advertiesment
வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
, செவ்வாய், 24 ஜனவரி 2017 (15:50 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராடிய இளைஞர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். அவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 
 
சென்னையில் நேற்று போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுப்பட்ட போலீசார் மீது வழக்க்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் சென்னையின் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வடப்பழினி ஆகிய இடத்தில் வன்முறை வெடித்தது.
 
இந்த வன்முறையின் போது போலீசார் சிலரே ஆட்டோ, குடிசைகளுக்கு தீ வைத்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர் பாலு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை காலை வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்!