Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்குமார் ஒரு நாளுக்கு முன்பே கைது செய்யப்பட்டார் : வழக்கறிஞர் ராமராஜ் பரபரப்பு தகவல்

ராம்குமார் ஒரு நாளுக்கு முன்பே கைது செய்யப்பட்டார் : வழக்கறிஞர் ராமராஜ் பரபரப்பு தகவல்
, வெள்ளி, 8 ஜூலை 2016 (09:01 IST)
சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் ஒரு நாளுக்கு முன்பே கைது செய்யப்பட்டார் என்றும், அவர் பேசக்கூடாது என்பதற்காக போலீசாரே அவரின் கழுத்தில் அறுத்துள்ளனர் என்று வழக்கறிஞர் ராமராஜ் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.


 

 
சுவாதி கொலை வழக்கில் கைதான விவகாரத்தில் நாளுக்கொரு செய்தி வெளியாகி வருகிறது. பல திடுக்கிடும் மர்மங்களும், திருப்பங்களும் இந்த வழக்கில் இணைந்துள்ளது போலவே தெரிகிறது.
 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சமீபத்தில் அவரின் உறவினரும், வழக்கறிஞருமான ராமராஜ் சந்தித்து பேசியுள்ளார். அதன்பின் அவர் பல பகீர் தகவலகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
 
சுவாதி கொலை வழக்கில் போலீசார் நடந்து கொண்ட விதத்தை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. போலீசார் கூறியது ராம்குமாரை அன்று இரவு கைது செய்யப்படவில்லை. முதல் நாளே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு ஒரு இடத்தில் வைத்து அவரை விசாரணை செய்துள்ளனர்.
 
“அவரது கழுத்தை அரை வட்ட வடிவில் அறுத்துள்ளனர். அவர் பேசக்கூடாது என்பதற்காக அப்படி செய்துள்ளனர். ரத்தம் வடிய மயங்கிய நிலையில், அவரை ஊருக்குள் அழைத்து வந்துள்ளனர். மின்சாரத்தை நிறுத்திவிட்டு, ராம்குமாரின் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். வெளியே வந்த தந்தையிடம் “ இது உன் மகனா?. கழுத்தை அறுத்துக் கொண்டான்” என்று கூறியுள்ளனர்.
 
ராம்குமாரை கொல்வதுதான் போலீசாரின் நோக்கம். ஆனால், அப்படி செய்தால் ஊர்மக்கள் அவர்களை சும்மா விடமாட்டார்கள் என்று தெரிந்து விட்டு விட்டனர்.  
 
இதையெல்லாம் மறைப்பதற்காக அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என்று ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.  எந்த நேரம் தனக்கு என்ன ஆகுமோ என்ற பயத்திலேயே ராம்குமார் இருந்துள்ளார். இப்போதும் இருக்கிறார்,
 
அவருக்கு என்ன நடந்தாலும் போலீசார்தான் பொறுப்பு. நெல்லையில் அவர் அளித்த வாக்குமூலம் அவருடயது அல்ல. இந்த வழக்கில், உண்மையான தகவல்கள் விரைவில் வெளிவரும்” என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல்வாதிகள் டார்ச்சர்: டி.எஸ்.பி தற்கொலை