Publish Date: Fri, 31 May 2024 (09:27 IST)
Updated Date: Fri, 31 May 2024 (09:29 IST)
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்த பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை தமிழ்நாடு அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக வெள்ளத்துரை பணியாற்றி வந்த நிலையில் திடீரென அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர் இவர் என்றும், மருதுபாண்டியர் குருபூஜையின் போது 2013-ம் ஆண்டு எஸ்.ஐ. ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை வெள்ளத்துரை என்கவுன்டர் செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.