Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு 137, திமுகவுக்கு 97, மற்ற கட்சிகள் பூஜ்யம்: இது எந்த கருத்துக்கணிப்பு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:08 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு உரிய அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று மாலை கிட்டதட்ட அனைத்து ஊடகங்களிலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் திமுக வெற்றி பெரும் என்றும், திமுகவுக்கு 140 முதல் 170 தொகுதிகளில் வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது 
 
அதிமுகவுக்கு அதிகபட்சம் 60 தொகுதிகள் கிடைக்கும் என்றும் பிற கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. எனவே கிட்டத்தட்ட திமுக ஆட்சிதான் அமையப் போகிறது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் அதிமுக ஆதரவு ஊடகமான நியூஸ்ஜெ வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 137 தொகுதிகள் கிடைக்கும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் திமுக கூட்டணிக்கு 97 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி தவிர வேறு எந்த கூட்டணிக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments