Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்காக விரலை வெட்டிய அதிமுக தொண்டர் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (17:28 IST)
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்காக அதிமுக தொண்டர் ஒருவர் தனது வேண்டுதலை நிறைவேற்ற கை விரல் ஒன்றை வெட்டியுள்ளார்.
 

 
 
 
இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா பெறாதா என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. ஒரு சில கருத்துக்கணிப்புகள் அதிமுகவுக்கு எதிராகவே வந்தது. இந்நிலையில் தங்கராஜ் (50) என்ற தீவிர அதிமுக தொண்டர் ஒருவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வரானால் தனது விரலை வெட்டி உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக  ராசிபுரம் அருகேயுள்ள முனியப்பன் கோவிலில் வேண்டுதல் வைத்துள்ளார்.
 
இந்நிலையில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ள நிலையில் தங்கராஜ் தனது வேண்டுதலை செலுத்த இன்று காலை ராசிபுரம் முனியப்பன் கோவிலுக்கு தனது நண்பருடன் வந்துள்ளார். தனது இடது கை சுண்டு விரலை வெட்டிக்கொண்டார் அவர்.
 
துண்டான தங்கராஜின் விரல் கையில் இருந்து விழாமல் தொங்கியவாறு இருந்துள்ளது. இதனை பார்த்த அவரது நண்பர் ராஜா, தங்கராஜை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபான வசதியுடன் திருமலை திருப்பதியில் சொகுசு ஓட்டல்.. தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு..!

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பில் கொண்டு வர திட்டம்.. ஒரே நாடு ஒரே கோவில் நிர்வாகமா?

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. நீண்ட சரிவுக்கு பின் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி..!

நேற்று தலைகீழாக குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம்.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments