Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள முதல்வரான பினராயி விஜயன் : கோபத்துடன் வெளியேறிய அச்சுதானந்தன்

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (17:21 IST)
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மூத்த தலைவரான பினராயி விஜயன் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


 

 
தமிழ்நாட்டை போலவே கேரள மாநிலத்திலும், கடந்த 12ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், ஆளுங்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியடைந்தது. 
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
இந்நிலையில், இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில் முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. முதலில் அச்சுதானந்தன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், மூத்த தலைவரான பினராயி விஜயன் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த அச்சுதானந்தன் அங்கிருந்து கோபமாக வெளியேறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments