Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மருத்துவமனையில்: தவியாய் தவிக்கும் விந்தியா!

ஜெயலலிதா மருத்துவமனையில்: தவியாய் தவிக்கும் விந்தியா!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (09:09 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலக்குறைவால் அதிமுகவினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.


 
 
முதல்வர் பெயரில் அர்ச்சனை, வழிபாடு என அதிமுகவின் தீவிர வேண்டுதலில் உள்ளனர். அதிமுகவின் தலைமை கழக பேச்சாளரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகை விந்தியாவும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற கோவில் கோவிலாக பிராத்தனை செய்து வருகிறார்.
 
நடிகை விந்தியா அதிமுகவில் முக்கியமான பேச்சாளர். எதிர் கட்சிகளை கிழி கிழி என கிழித்து தனக்கே உரிய பாணியில் நக்கலும், நையாண்டியுமாக பேசுவார் விந்தியா. இவரின் பேச்சை ரசிக்க ஒரு கூட்டமே உண்டு அதிமுகவில். இவரது பேச்சை ரசித்து கேட்கும் ஜெயலலிதா பலமுறை விந்தியாவை பாராட்டியுள்ளார்.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் விந்தியா துடித்து போய்விட்டார். அன்று முழுவதும் உணவு உண்ணாமல் அழுதபடியே இருந்துள்ளார் விந்தியா.
 
இப்போதெல்லாம் விந்தியா வீட்டுக்கே செல்வதில்லையாம். கோவில் கோவிலாக முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிராத்தனை செய்து வருகிறார். ஒரு கோயிலில் வேண்டுதல் முடிந்ததும், அடுத்த கோயில் என தனது பிராத்தனையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா மீது அளவு கடந்த அன்பு கொண்ட விந்தியா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்! - கன்னியாகுமரியில் ஜூன் 22-இல் நடைபெறுகிறது

2400 ரூபாய் கொடுத்தால் ரத்தம் கிடைக்கும்.. அரசு மருத்துவமனை முன் நடக்கும் வியாபாரம்.. அதிர்ச்சி தகவல்..!

KYC சரிபார்ப்பு என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி: எஞ்சினியர் கைது..!

10 நிமிடம் சார்ஜ் செய்தால் 27 மணிநேரம் பயன்படுத்தலாம்! வந்துவிட்டது ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z3..!

அடுத்த கட்டுரையில்
Show comments