தமிமுன் அன்சாரி கோரிக்கையை ஏற்று அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்டமன்றத்தில் பரபரப்பு

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (10:24 IST)
தமிமுன் அன்சாரி கோரிக்கையை ஏற்று அதிமுக சார்பில் சட்டமன்றத்தில்  கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கக் கோரி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சந்தித்த போது, ‘20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதிமுகவின் எல்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையாக உள்ள நிலையில்  சிறப்பு தீர்மானம் கொண்டுவர எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம் என்று பேட்டி அளித்திருந்தார். அவருடைய கோரிக்கையை வலியுறுத்தி இன்று அதிமுக  சார்பில் சட்டமன்றத்தில்  கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் கூடியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில் இன்றைய கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம் குறித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன் மொழிய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கதம் கதம்!.. வேற கேளுங்க!.. செங்கோட்டையன் பற்றி கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன்!...

தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1440 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

ஒரே ஒரு மெயில் ஹேக் செய்து ரூ.2.16 கோடி மோசடி.. காவல்துறையின் துரித நடவடிக்கை..!

இடிக்கப்படுகிறது டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்.. என்ன காரணம்?

கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments