Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக ஆட்சி ஐசியூவில் படுத்திருக்கிறது: சொல்லாமல் சொல்லும் ஸ்டாலின்!

அதிமுக ஆட்சி ஐசியூவில் படுத்திருக்கிறது: சொல்லாமல் சொல்லும் ஸ்டாலின்!

அதிமுக ஆட்சி ஐசியூவில் படுத்திருக்கிறது: சொல்லாமல் சொல்லும் ஸ்டாலின்!
, வியாழன், 3 நவம்பர் 2016 (15:06 IST)
தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு செயல்படாமல் இருப்பதை விமர்சிக்கும் விதமாக அதிமுக அரசு ஐசியூவில் படுத்திருக்கிறது என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.


 
 
தர்மபுரியில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி இல்லத்திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆட்சியில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக எல்லா திட்டங்களையும் ஜெயலலிதா துவக்கி வைத்தார். அதை தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல. கான்ஃபரன்ஸ்  காட்சி என்று கலைஞர் விமர்சித்தார். இப்போதோ அப்போலோ காட்சி நடக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம் என்றார் ஸ்டாலின்.
 
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா என்பதே பெரும்பாலானோரின் கேள்வி. கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியை ஐசியூவில் படுத்திருக்கிறது என்று கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இப்போது அப்படி கூற முடியாத சூழல். அப்படி சொன்னால் அது வேறு மாதிரி திசை திருப்பப்படும் என கூறி மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஐசியூவில் படுத்திருக்கிறது என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 கால்களுடன் வாழ்ந்து வரும் வாலிபர்