தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிமுக அரசின் ஆயுட்காலம் மே மாதம் 24ஆம் தேதி வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குள் தேர்தல் நடத்தி அடுத்த அரசை அமைக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் பணி ஆகும்
எனவே மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தேர்தல் நடக்கும் என்றும் மே 24-ம் தேதிக்குள் அடுத்த அரசு பொறுப்பேற்கும் வகையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. மே மாதத்திற்கு பதிலாக ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது
இன்று சென்னையில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே அதாவது ஏப்ரல் மாதமே தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்று ஏப்ரல் மாதம் தேர்தலை அறிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்