Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் ஒரங்கட்டப்படும் செந்தில் பாலாஜி : பின்னணி என்ன?

கரூரில் ஒரங்கட்டப்படும் செந்தில் பாலாஜி : பின்னணி என்ன?

Advertiesment
கரூரில் ஒரங்கட்டப்படும் செந்தில் பாலாஜி : பின்னணி என்ன?
, சனி, 10 செப்டம்பர் 2016 (15:26 IST)
கரூர் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும், கரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வும், தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஆவார். 


 

 
தமிழகத்தில் எங்கே அரசு நிகழ்ச்சிகள் இருந்தாலும் சரி ’நானும் ஒரு அரசு கலைக்கல்லூரி மாணவர்தான்’ என்று அரசு கலை கல்லூரியிலும், அரசுப்பள்ளியிலும் பயில வேண்டுமென்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 
 
ஆனால் அவர் படித்த கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியின் 50வது ஆண்டு விழா இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழக போக்குவரத்து துறையின் தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உள்பட பல முக்கிய வி.ஐ.பி க்கள் கலந்து கொண்டனர்.
 
ஆனால் ஒரு பெயரளவிற்கு கூட முன்னாள் மாணவர் என்ற முறையில் செந்தில் பாலாஜியை அழைக்கவில்லை. அ.தி.மு.க வின் நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படவில்லை. 
 
இதற்கான காரணம் இன்றுதான் முன்னாள் மாணவர்களுக்கு தெரிந்துள்ளது. அதாவது கல்வியில் விலையில்லா கல்வியை எதிர்நோக்கியிருக்கும் தமிழக அரசும், தமிழக அரசை நன்கு வழிநடத்தும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நல்ல பெயர் சூட்டப்படுவதற்காக கல்வியை அரசு முறையிலும், அரசு வழியிலும் பயில்வதற்காக உழைத்தவர் செந்தில் பாலாஜி என்றும், அந்த கல்வியை கட்டணக் கல்வியாக மாற்றியதோடு, அதை தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் கல்வி நிறுவனங்களை தனியார் மயமாக பாடுபட்டவர் மற்றும் பாடுபட்டு வருபவர் தம்பித்துரை என்றும் இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் புலம்பிய வண்ணம் உள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் கமலை பின்பற்றும் சிவகார்த்திகேயன்!