Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அதிகாரியை தாக்கிய அதிமுகவினர்! – கடலூரில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (12:18 IST)
உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில் அதிமுகவினர் கடலூர் தேர்தல் அதிகாரியை தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான மேட்புமனுக்கள் தாக்கல் செய்வது முடிவடைந்த நிலையில் பரிசீலனை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டதில் கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி பாரபட்சம் காட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுகவினர் சிலர் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதத்தில் தேர்தல் அதிகாரியை அதிமுகவினர் தாக்கியதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற 7 நாட்களே உள்ள நிலையில் திடீரென நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments