இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதுமே கடந்த இரண்டு நாட்கள் போலவே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்ட நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் அப்பாவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த எம்எல்ஏக்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் அவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர் என்று அதிமுகவினரின் அமளி குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அவை அலுவல்களை நடத்த விடாமல் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் எதிர் கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயக கடமையை ஆற்றவில்லை என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இது குறித்து தெரிவித்துள்ளார்