Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தனித்துப் போட்டியிருக்கலாம் – பொன் ராதாகிருஷ்ணனின் கருத்தும் அதிமுக அமைச்சர்களின் எதிர்வினையும் !

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (08:52 IST)
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இருந்தால் பாஜக தன் பலத்தை நிரூபித்திருக்கலாம் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததை அடுத்து அதிமுக அமைச்சர்கள் அதற்கு பதில் அளித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்த பாஜக,  85 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களையும், 7 மாவட்டக் கவுன்சிலர் பதவியிடங்களையும் மட்டுமே கைப்பற்றியது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இருந்தால் பாஜக தன் செல்வாக்கைக் காட்டியிருக்கலாம் என பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் பொன் ராதாகிருஷ்ணனின் இந்த கருத்துக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ‘அவர் பேசியது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது’ எனக் கூறியுள்ளார். மற்றொரு அமைச்சரான ராஜேந்திர பாலாஜி ‘பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது கருத்தும். எல்லா கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால்தான் அனைவரின் பலமும் தெரியும். அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டாலும் அதிமுகவை வெல்ல முடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments