அடுத்தடுத்த ஆலோசனையால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இல்லம் உள்ள சென்னை கிரீன்வேஸ் சாலை பரபரப்பாக உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக கட்சிகளுக்குள் கட்சி தாவல்களும், உட்கட்சி பூசல்களும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக முக்கியஸ்தர்களிடையே பல்வேறு நிலைபாடுகள் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார்? என துணை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை முடிந்ததும் முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து 2வது கட்டமாக ஓ.பி.எஸ் உடன் நடந்த ஆலோசனையை தொடர்ந்து மீண்டும் ஈ.பி.எஸ் உடன் ஆலோசனை நடத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட 6 பேர் அவரது இல்லத்திற்கு செல்கின்றனர்.
அடுத்தடுத்த ஆலோசனையால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இல்லம் உள்ள சென்னை கிரீன்வேஸ் சாலை பரபரப்பாக உள்ளது. இந்த ஆலோசனைகள் நடந்து முடிந்த பின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை விட வாய்ப்புள்ளதாக தகவல்.