Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர்கள், டிஜிபி, கமிஷனர் அப்போலோவில் ஆலோசனை : பின்னனி என்ன?

அமைச்சர்கள், டிஜிபி, கமிஷனர் அப்போலோவில் ஆலோசனை : பின்னனி என்ன?

அமைச்சர்கள், டிஜிபி, கமிஷனர் அப்போலோவில் ஆலோசனை : பின்னனி என்ன?
, திங்கள், 3 அக்டோபர் 2016 (11:52 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிமுக அமைச்சர்கள், டிஜிபி மற்றும் மாநகர கமிஷனர் ஆகியோர் நேற்று ஒன்று கூடி ஆலோசனை செய்தனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது பல தகவல்களும் , வதந்திகளும் பரவி வருகின்றன.
 
முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்து வருகிறது, இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார், இவைதான் அதிகாரப்பூர்வமாக மருத்துவமனை நிர்வாகத்தினால் அறிவிக்கப்படும் தகவல். ஆனால் மருத்துவமனையில் என்ன நடக்கிறது, அவரது உடல் நிலை தற்போது என்ன நிலையில் உள்ளது போன்ற தகவல்கள் கசிந்து செய்திகளில் வந்துகொண்டு தான் உள்ளது.
 
இந்நிலையில், நேற்று மாலை ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உட்பட அனைத்து அதிமுக அமைச்சர்களும் அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தனர். அதேபோல், காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகளும் வந்தனர். 

webdunia

 

 
அவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, அங்கு ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதன்பின் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். ஆனால், அவர்கள் யாரும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்த தகவலையும் கூறாமல் சென்றுவிட்டனர். 
 
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் காணப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு பிராத்தனை செய்த திமுகவினர்!