Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை – ஜெயக்குமார் தடாலடி

அதிமுக வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை – ஜெயக்குமார் தடாலடி
, திங்கள், 24 டிசம்பர் 2018 (10:15 IST)
ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையால் திமுக வுக்கும் மற்றக் கட்சிகளுக்கும்தான் பாதிப்பு. அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

இன்னும் 5 மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக வுக்கு எதிராக காங்கிரஸ் மாநிலக் கட்சிகளை ஒன்றினைத்து வலுவான மெகாக் கூட்டணியை அமைக்கும் முனைப்பில் உள்ளது. தமிழக்த்தைப் பொறுத்தவரை திமுக, விடுதலை சிறுத்தைகள், இடது சாரிக் கட்சிகள் ஆகியவைக் காங்கிரஸை ஆதரித்து ராகுலைப் பிரதமர் வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர்.

மேலும் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையும் தமிழக அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் திமுக மற்றும் அதிமுக வின் வாக்கு வங்கிகள் பெருமளவில் உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தினை நிர்ருபிக்கும் தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பிய போது ‘ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகையால் அதிமுகவின் வாக்கு வங்கிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது திமுகவும் மற்ற கட்சிகளும்தான். கமல்ஹாசன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் திமுகவின் வாக்குகளையோ அல்லது மற்ற கட்சிகளின் வாக்குகளையோதான் பிரிப்பார். இதனால் எங்களுடைய ஓட்டுக்கள் பிரியாது’ எனக் கூறியுள்ளார்.

ஜெயக்குமாரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. அதிமுக வுக்கு மக்கள் மனதில் எந்த இடமும் இல்லை என்பது தற்போதைய நிதர்சனம். அதிமுகவுக்கு ஒரு தொகுதியாவது கிடைக்குமா என்பது கூட இப்போதைய நிலையில் சந்தேகமே என அர்சியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் ஜெயக்குமாரின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன.

மக்கள் மைண்ட்வாய்ஸ் -‘அதிமுக வுக்கென்று வாக்கு வங்கி இருந்தால்தானே… அது பிரிவதற்கு…’ 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

90 கிமீ நாகப்பாம்பை கையில் எடுத்து வந்த நபர்: த்ரில் அனுபவம்; அதிரவைக்கும் பின்னணி