Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அழுது புரண்டாலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது: ஜெயகுமார்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (10:29 IST)
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாஅகி பல சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
சர்கார் திரைப்படம் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இசை வெளியீட்டு விழாவின் போது கூறியது போலாவே சர்கார் படத்தில் அரசியல் மெர்சலாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் தற்போது எதிர்ப்புகளாக வெளிவருகிறது. 
 
குறிப்பாக சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர். இதற்கு ஒரு படி மேலே சென்று தனியரசு இயக்குனர் முருகதாஸ், விஜய் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், இது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் பின்வருமாறு பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, எம்.ஜி.ஆரை போல் யாராலும் வர முடியாது. நடிகர் விஜய் அழுது புரண்டாலும், தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments