Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலினை சகட்டுமேனிக்கு திட்டிய அதிமுக அமைச்சர்: உக்கிரத்தில் திமுக தொண்டர்கள்

Advertiesment
ஸ்டாலினை சகட்டுமேனிக்கு திட்டிய அதிமுக அமைச்சர்: உக்கிரத்தில் திமுக தொண்டர்கள்
, புதன், 26 டிசம்பர் 2018 (17:39 IST)
தமிழகத்தில் இருக்கும் இரு பெரிய முக்கிய அரசியல் கட்சிகள் திமுக மற்றும் அதிமுக. இவ்விறு கட்சிகளும் தங்களை மாற்றி மாற்றி திட்டிக்கொள்வதும், விமர்சிப்பதும் வழக்கமானதுதான்.
 
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினை அதிமுக அமைச்சர்கள் பலர் மரியாதையின்றி தரக்குறைவாக பேசுவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, ராகுல் காந்தியை முதல்வர் வேட்பாளாரக முன்மொழிந்த விவகாரத்தில் ஸ்டாலின் மீது தேசிய அளவில் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் தற்போது அதிமுக அமைச்சர் ஒருவர் ஸ்டாலின் அவன் இவன் என ஒருமையில் பேசியுள்ளது திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
webdunia
வேலுர் சோளிங்கரில் அதிமுக சார்ப்[இல் தேர்தல் பூத் கமிட்டி குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் சம்பத் ஸ்டாலினுக்கு தமிழகத்தின் முதல்வராகும் ராசி இல்லை என கூறினார்.
 
அதோடு கொளத்தூரில் மட்டும் மருத்துவ முகாம், கிருஸ்துமஸ் கொண்டாட்டம் ஆகியவற்றை நடத்தும் அவர் கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமே மாநில தலைவர் என பேசியதோடு அவன் இவன் என ஒருமையிலும் பேசி திமுகவினரின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காணமல் போன அமமுக பிரமுகர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சோகம்