Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாக்கடை புஷ்பாவின் ‘பூக்கடை’ சமாச்சாரங்கள்: சசிகலா புஷ்பாவை வறுத்தெடுத்த அதிமுக பத்திரிகை!

சாக்கடை புஷ்பாவின் ‘பூக்கடை’ சமாச்சாரங்கள்: சசிகலா புஷ்பாவை வறுத்தெடுத்த அதிமுக பத்திரிகை!

Advertiesment
சாக்கடை புஷ்பாவின் ‘பூக்கடை’ சமாச்சாரங்கள்: சசிகலா புஷ்பாவை வறுத்தெடுத்த அதிமுக பத்திரிகை!
, புதன், 12 அக்டோபர் 2016 (17:13 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக பேசிவருகிறார். நாடாளுமன்றத்தில் அதிமுக தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த சசிகலா புஷ்பா மீண்டும் அதிமுகவை சீண்ட ஆரம்பித்துள்ளார்.


 
 
சசிகலா புஷ்பா மீது பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சசிகலா புஷ்பாவை கைது செய்ய பல்வேறு முயற்சிகள் நடந்தும் அவர் நீதிமன்றங்கள் மூலம் கைதுக்கு தடை உத்தரவு வாங்கி வருகிறார்.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அதிமுக மீதான தனது தாக்குதலை தொடங்கினார். குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை வறுத்தெடுத்தார்.
 
அதிமுக அரசை வழிநடத்துவது சசிகலா எனவும், முதல்வரின் கையெழுத்து போலியாக தவறாக பயன்படுத்தப்படுகிறது. முதல்வரின் உடல்நலக்குறைவுக்கு காரணம் சசிகலா கும்பல் தான். சசிகலா உடனடியாக அப்பல்லோவை விட்டு வெளியேற வேண்டும் என மிகவும் கடுமையான விமர்சனங்களை வைத்தார் சசிகலா புஷ்பா.
 
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் சாக்கடை புஷ்பாவின் ‘பூக்கடை’ சமாச்சாரங்கள்! என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கிறது.

webdunia

 
 
அதில், எச்சையே உனக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை பிச்சையிட்டது யார்? ஆனால் பகையாளியோடு உறவாடி, கூர் தீட்டிய மரத்துக்குக் குந்தகம் செய்கிறது, நன்றி கெட்ட உன் நடத்தை. போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன்... என்பதுதான் பொழுதெல்லாம் உன்கூலி பிழைப்பு என்பதால் கள்ளமில்லா ஓர் நட்பை களங்கம் செய்கிறாய் என ஆரம்பித்து சசிகலா புஷ்பாவை கடுமையாக விமர்சித்துள்ளது அந்த கட்டுரை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மாவை பார்க்க விடவில்லை என்று யார் சொன்னது? : பரபரப்பை கிளப்பும் பவர் ஸ்டார்