Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தியத்தின் கோட்டைக்குள் சாத்தான் நுழைய முடியாது: சசிகலா குறித்து அதிமுக நாளேடு

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (07:00 IST)
அதிமுகவில் தற்போது இரட்டை தலைமையாக இருந்துவரும் நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ஒரே தலைமையாக மாறும் என்று அதிமுக வட்டாரங்கள் கடந்த சில மாதங்களாக கூறிவருகின்றன

நன்னடத்தை காரணமாக சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே வெளியே வந்துவிடுவார் என்றும் அடுத்த வருடம் மத்தியில் அவர் வெளியே வந்ததும், அவரது கையில் கட்சிப் பொறுப்பை வழங்கிவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பொறுப்பை தன் கையில் வைத்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டது

இதனால் தான் அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாகவும் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்ததும் பொதுக்குழு நடைபெற எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்து கொண்டு வருகின்றன

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சசிகலா அதிமுகவில் எந்த காலத்திலும் தலைமை தாங்க முடியாது என அதிமுகவின் அதிகாரபூர்வமான நாளேடு தெரிவித்துள்ளது. அந்த நாளேட்டில் கூறப்பட்டுள்ளதாவது: சசிகலா மீண்டும் அதிமுகவிற்கு தலைமைத் தாங்கவும் முடியாது ; தினகரனால் முதல்வராகவும் முடியாது. சத்தியத்தின் கோட்டைக்குள் சாத்தான் மீண்டும் சரசமாட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி சசிகலா அதிமுகவின் தலைமை ஏற்று மீண்டும் அதிமுகவிற்கு நுழைய கட்சிக்குள்ளேயே ஒரு தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பு இருக்கின்றது என்பதும் குறிப்பாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் சசிகலாவை கட்சிக்குள் நுழைய விட மாட்டார்கள் என்றும் அதிமுகவின் இன்னொரு தரப்பு கூறிவருகிறது இதனால் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments