Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கொடுக்கும் கசப்பிற்கு எங்களிடம் மருந்து இருக்கிறது: கூட்டணிக்கு காங்கிரஸை அழைத்த அதிமுக..!

Mahendran
வியாழன், 29 பிப்ரவரி 2024 (15:53 IST)
திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் கசப்புக்கு எங்களிடம் நல்ல மருந்து இருக்கிறது என்று அதிமுக, காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவை சேர்ந்த வைகை செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது திமுக காங்கிரஸ் கூட்டணியில் மனக்கசப்பு இருப்பதாகவும் ஆனால் அந்த கசப்பிற்கு எங்களிடம் வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல மருந்து கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி எங்களை நம்பினால் நல்ல எதிர்காலம் எடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைந்தால் இந்தியா கூட்டணியில் அதிமுக இடம்பெறுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த வைகை செல்வன் ’இவையெல்லாம் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம், கூட்டணி குறித்து வெளிப்படையான பதிலை நிச்சயம் நாங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தருவோம், எங்கள் பொதுச் செயலாளர் நல்ல செய்தியை அடுத்தடுத்து வெளியிடுவார். 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வியூகங்கள் அவர் வகுத்துள்ளார், அந்த வியூகங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்று வைகை செல்வன் கூறினார். 
 
திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி, அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments