Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இப்படி ஆனா நோ எண்ட்ரி!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (14:23 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடத்தப்பட உள்ளது என முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தெரிவித்துள்ளார். 

 
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
 
இதுதொடர்பாக முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதில் ஜனநாயக முறைப்படி கட்சி செயல்படுவதாகவும், கட்சி பெரும்பான்மையினரின் கருத்துகளை மீறி ஓபிஎஸ் செயல்படுவதாகவும் எடப்பாடி அணி குற்றம் சாட்டியது.
 
இன்று இந்த வழக்கு மீதான விசாரணையில் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் வருகிற 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடத்தப்பட உள்ளது என முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தெரிவித்துள்ளார். 
 
மேலும் அவர் கூறியதாவது, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தின் உள்ளே பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை. மண்டபத்துக்கு வெளியே பிரமாண்ட அளவில் பந்தல் அமைத்து பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் அனைவருக்கும் முககவசம், கையில் கிருமிநாசினி தெளிக்கப்படும். 
 
இதுதவிர அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் தனித்தனியாக ஒரு கிருமி நாசினி பாட்டில் வழங்கப்படும். பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியே ஆம்புலன்சுடன் மருத்துவக்குழுவினர் இருப்பார்கள். பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் வெப்ப பரிசோதனை செய்து உள்ளே அனுப்புவார்கள். பரிசோதனையின் போது காய்ச்சல் அறிகுறி இருந்தால் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்