Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் ஐக்கியம்!

Advertiesment
அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் ஐக்கியம்!
, புதன், 21 ஜூலை 2021 (11:10 IST)
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வ து நடராஜன் இன்று திமுகவில் சேர்ந்துள்ளார்.

தேர்தலுக்குப் பின்னர் அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகேந்திரன் பத்மபிரியா, அதிமுகவின் தோப்பு வெஙகடாசலம் ஆகியோர் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று ராமநாதபுரத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து நடராஜன் திமுகவில் இணைந்தார். அதேபோல அமமுகவை சேர்ந்த ம.சேகர், வ.து.ஆனந்த், முன்னாள் அமைச்சர் மகன் பட்டுக்கோட்டை செல்வமும் திமுகவில் இணைந்தனர். இவர்களின் திமுக ஐக்கியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொங்கு மண்டலத்தை வழிநடத்த வாரீர் – சசிக்கலா போஸ்டரால் பரபரப்பு