Publish Date: Fri, 29 Jan 2021 (13:58 IST)
Updated Date: Fri, 29 Jan 2021 (14:00 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சசிக்கலா விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டிய நெல்லை அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது திருச்சியில் சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டிய அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிதி புலியூர் அண்ணாதுரையை கட்சியிலிருந்து நீக்கியதாக அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.