Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிபெற்ற அதிமுக கவுன்சிலர் திமுகவுக்கு தாவல்! – அதிர்ச்சியில் அதிமுக!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (15:37 IST)
ஆவடியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆவடி மாநகராட்சி 14வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜேஷ்குமார். இன்று காலை அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் திமுக அமைச்சர் நாசர் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் நின்று வென்ற கவுன்சிலர் திமுகவிற்கு தாவிய சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments