Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை அசத்தல் வெற்றி!!

Advertiesment
தமிழகம்
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (13:45 IST)
வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார். 
 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 
 
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார். இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினராக இருந்தவர். 
 
தற்போது திருநங்கை கங்கா நாயக் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் திருநங்கைகளும் இது தங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதி கொண்டாடி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#நாங்க_வந்துட்டோம்னு_சொல்லு... தெறிக்க விடும் பாஜக!