Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

30 தொகுதிகளில் இரட்டை இலை.. பாமக-தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்: ஈபிஎஸ் திட்டம்..

Advertiesment
admk office

Siva

, திங்கள், 4 மார்ச் 2024 (08:04 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ள அதிமுக 30 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட போவதாகவும் 10 தொகுதிகளில் பாமக மற்றும் தேமுதிகவுக்கு பகிர்ந்து அளிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தற்போது புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி, எஸ்டிபிஐ மற்றும் புரட்சி பாரதம் ஆகிய ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தை முடித்து தலா ஒரு தொகுதி பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த ஐந்து கட்சிகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக 25 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் இந்த ஐந்து தொகுதிகளையும் சேர்த்தால் மொத்தம் 30 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

மீதமுள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகள் பாமகவுக்கும் நான்கு தொகுதிகள் தேமுதிகவுக்கும் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இரு கட்சிகளும் அவரவர் சின்னத்தில் போட்டியிடலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுக ஏற்கனவே 25 தொகுதி தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் அதிமுக 30 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் அணிக்கு புதிய பெயர்.. அதிலும் அதிமுக பெயர் இருக்குதே..!