கனிமொழியை எதிர்த்து வலிமையான வேட்பாளரை நிறுத்துவோம்: கடம்பூர் ராஜூ

Siva
திங்கள், 19 பிப்ரவரி 2024 (06:56 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளராக கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்து வலிமையான போட்டியாளரை நிறுத்துவோம் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த முறை தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார்.  அவர் கனிமொழிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் பரிதாபமாக தோல்வி அடைந்தார் என்பதும் தெரிந்தது.

இந்நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி மீண்டும் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் தான் நிறுத்தப்படுவார் என்றும் அது மட்டும் இன்றி அந்த தொகுதியில் வெற்றி பெறும் வகையில் வலிமையான போட்டியாளர் நிறுத்தப்படுவார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

மேலும் திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அதிமுக கூட்டணியில் இணைய பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தொகுதி பங்கீடு குறித்த இறுதி தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments